SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரைத்தண்டு சாதம்

2018-08-23@ 16:34:58

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 1 கப்,
சிறிய துண்டுகளாக நறுக்கிய தாமரைத்தண்டு - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
தாளிக்க சீரகம் - 1 டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்.

அரைக்க...

பச்சைமிளகாய் - 2,
வெள்ளரி விதை - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1.

அலங்கரிக்க...

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
நெய்யில் பொரித்த பனீர் துண்டுகள் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மிக்சியில் பச்சைமிளகாய், வெள்ளரி விதை, வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி, தாமரைத்தண்டை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடவும். தாமரைத்தண்டு வெந்ததும் உப்பு, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழை, பனீர் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்