SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹனி சில்லி பொட்டேடோ

2018-08-06@ 17:31:13

என்னென்ன தேவை?

நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 250 கிராம்,
உப்பு - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 2 கப்,
அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,
மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 3½ டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு - 3 பல்,
கீறிய பச்சைமிளகாய் - 3,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/2,
குடைமிளகாய் - 1/4,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப்,
தேன் - தலா 2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.


எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நீள நீளமாக நறுக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன்  அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர் ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்