SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்லெட்

2018-08-06@ 17:28:05

என்னென்ன தேவை?

சோயா - 100 கிராம்,
பெரிய உருளைக்கிழங்கு - 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
முட்டை - 2 அல்லது மைதா - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மட்டன் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
மல்லித்தழை - 1 கைப்பிடி,
பிரெட் தூள், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை  வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் சோயாவை 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி, அதில் உள்ள நீரை பிழிந்து விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி சோயா, அனைத்து மசாலாத்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, மல்லித்தழை கலந்து இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக  தட்டி,  முட்டையில் தோய்த்து எடுத்து பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்