SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் பாப்ஸ்

2018-08-02@ 17:37:49

என்னென்ன தேவை?

பனீரை மேரினேட் செய்ய...

பனீர் - 300 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், உப்பு - தலா  1/4  டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

பாப்ஸ் செய்ய...

கார்ன்ஃப்ளார், மைதா - தலா 4 டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் - 1/2 கப்,
பிரெட் க்ரம்ஸ் - 3 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மேரினேட் செய்ய கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா, மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பனீர் துண்டுகளை கார்ன்ஃப்ளார் கலவையில் முக்கி பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மீண்டும் கார்ன்ஃப்ளார் மற்றும் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மிதமான சூட்டில் வைத்து பனீர் துண்டுகளை பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்