SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கசகசா ரைஸ்

2018-07-31@ 16:58:19

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க வறுத்த முந்திரி -5,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.

பொடிக்கு...

கசகசா- 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்.


எப்படிச் செய்வது?

பொடிக்கு கொடுத்த பொருட்களை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த பொடி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவலை தூவி, முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்