SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனானா பிரெட் லோஃப்

2018-07-25@ 16:52:21

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
பூவன் வாழைப்பழம் - 2,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
பால் - 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்சியில் மசித்துக் கொள்ளவும். இத்துடன் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும். பிறகு சலித்த மாவை போட்டு கலந்து ஒரு அலுமினிய பிரெட் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா தூவி இக்கலவையை அதில் போட்டு, மேலே பாதாம் தூவி 180 டிகிரி சூட்டில் அவனில் 45 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்