SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மலாய் சிக்கன்

2018-07-24@ 17:29:01

என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
மலாய் - 2 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 2½ டீஸ்பூன்,
லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலாத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், சோம்புத்தூள் - தலா 1/4 கப்.

டிக்கா செய்ய...

வுட்டன் ஸ்க்யூவர் - 3,
கரித்துண்டு - 1,
நெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி மேரினேட் செய்ய கொடுத்த பொருட் கள் அனைத்தையும் சிக்கனுடன் கலந்து 4-5 மணி நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். மரத்தினாலான ஸ்க்யூவரை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை எடுத்து  ஸ்க்யூவரில் சொருகி டிக்காவை ரெடி செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ெணய் விட்டு சிக்கனை வைத்து அனைத்து பக்கமும் வேகவைத்து  எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை போட்டு அதில் நெய் விட்டு சிக்கனுக்கு நடுவில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும்.  மையோனைஸுடன் சிக்கனை பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்