SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜ்மா பர்கர்

2018-07-24@ 17:26:11

என்னென்ன தேவை?

ராஜ்மா - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
மல்லித்தழை - 1 கைப்பிடி,
துருவிய கேரட் - 1,
ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மைதா, பிரெட் தூள் - தலா 1 டேபிள்ஸ்பூன்.

பர்கர் செய்ய...

பர்கன் பன் - 4,
மையோனைஸ் - 2 டீஸ்பூன்,
வட்டமாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி சாஸ் - தேவைக்கு, சீஸ் ஸ்லைஸ் - 4.


எப்படிச் செய்வது?

ராஜ்மாவை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, கேரட் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் அரைத்த ராஜ்மா, வதக்கிய வெங்காயம், கேரட் கலவை, மசாலாத்தூள்கள், ஓட்ஸ், மைதா, பிரெட் தூள், மல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.பர்கர் பன்னில் மையோனைஸ் தடவி மேலே பேட்டி (patty) வைத்து வெங்காயம், தக்காளி சாஸ் ஊற்றி, அதன் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து மூடி டூத் பிக் செருகி பரிமாறவும். வேண்டுமானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்