வடு மாங்காய்
2018-07-24@ 17:22:42

என்னென்ன தேவை?
மாவடு - 1 கிலோ,
உப்பு - தேவைக்கு,
விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 8,
கடுகு, வெந்தயம் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
கொம்பு மஞ்சள் - 4 துண்டுகள்.
எப்படிச் செய்வது?
அடிபடாத திக்கான மாவடுவை எடுத்து நன்றாகக் கழுவி
துளி கூட தண்ணீர் இல்லாமல் துடைக்கவும். விரலி மஞ்சளை நன்றாக நசுக்கி
மிக்சியில் போட்டு அரைத்து அத்துடன் கடுகு, வெந்தயம், உப்பு சேர்த்து
தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். சுத்தமான பீங்கான் ஜாடியில் ஒரு
கைப்பிடி மாவடு போட்டு 2 டீஸ்பூன் அரைத்த பொடி, 1 சொட்டு விளக்கெண்ணெய்
ஊற்றி மீண்டும் ஒரு கைப்பிடி மாவடு, 2 டீஸ்பூன் பொடி, 1 சொட்டு எண்ணெய்
இப்படி மாற்றி மாற்றி மொத்த மாவடு, பொடி, எண்ணெய் அனைத்தையும் சேர்த்து
நன்றாக குலுக்கி விடவும்.
மேலே ஒரு வெள்ளைத்துணியைக் கட்டி 2, 3
நாட்கள் வெயிலில் வைக்கவும். பிறகு துணியை எடுத்து விட்டு ஜாடியை நன்றாக
மூடி வைக்கவும். மாவடு விரைவில் நன்றாக ஊறி விடும். நன்றாக குலுக்கி விட்டு
கொண்டே இருக்கவும். அவ்வப்போது வெயிலிலும் வைக்கவும். மர ஸ்பூன், கல்
உப்பு உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு: மாவடு செய்ய ஆரம்பித்ததில் இருந்து தீரும் வரை துளி கூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. உப்பில் உள்ள நீரே போதுமானது.
Tags:
Tender Mango pickleமேலும் செய்திகள்
கடலை சத்து மாவு கஞ்சி
ரவா சேமியா மினி இட்லி
கொழுக்கட்டை சுண்டல்
இனிப்பு கம்பு கொழுக்கட்டை
அரிசி கொழுக்கட்டை
அரிசி வடை
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்
ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்