SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பரோட்டா

2018-07-23@ 12:26:06

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 250 கிராம்,
கோதுமை மாவு - 500 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது, காய்ந்த மாங்காய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து, மேலே சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.உருளைக்கிழங்கை  வேகவைத்து துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கு, உப்பு, மசாலா தூள்கள்  சேர்த்து  வதக்கி  இறக்கவும். ஆறியதும் பெரிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
பிசைந்த மாவிலிருந்து உருண்டையாக எடுத்து சிறிது தட்டி, நடுவில் உருளை மசாலாவை வைத்து மூடி மெதுவாக சாப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்