வெஜ் ஸ்பிரிங் ரோல்
2018-07-12@ 16:55:31

என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு...
மைதா மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
பூரணத்திற்கு...
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், கோஸ் - தலா 1/4 கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மைதா மாவு, உப்பு சேர்த்து பிசறி தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே எண்ணெய் தடவி 20 நிமிடத்திற்கு ஊறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பீன்ஸ், கேரட், கோஸ் போட்டு நன்கு வதக்கி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி சோயா சாஸ் கலந்து இறக்கவும். மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தியாக திரட்டி உள்ளே பூரணத்தை வைத்து பாய் போல் சுருட்டி மூடி ஓரங்களை, மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்த கரைசலால் ஒட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
Tags:
வெஜ் ஸ்பிரிங் ரோல்மேலும் செய்திகள்
கத்திரி துவையல்
வேர்க்கடலை குழம்பு
வீட் சேமியா பிரியாணி
மயிலாப்பூர் ராயர் அடை தோசை
ஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி
நவதானிய தோசை
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்