SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலாய் கீர்

2018-07-11@ 14:23:56

என்னென்ன தேவை?

பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், காய்ந்த திராட்சை, பேரீச்சை, கிர்ணி, வெள்ளரி விதை யாவும் கலந்தது - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 2 லிட்டர்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1½ கப் அல்லது தேவைக்கு.


எப்படிச் செய்வது?

சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். கடாயில் சிறிது நெய்யை விட்டு சூடானதும் டிரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸை வறுத்து வடித்து தனியே வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் நன்கு சுண்டக் காய்ச்சவும். அதில் படரும் பாலாடையை ஒதுக்கி காய்ச்சவும். பால் கெட்டியாக 1/2 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும். இந்த கெட்டியான பால் மலாய் ஆகும். இப்போது வறுத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ், குங்குமப்பூ அனைத்தையும் தூவி அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்