SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொறு மொறுப்பான பனீர் பக்கோடா

2018-07-10@ 16:05:09

என்னென்ன தேவை?

பனீர் - 250 கிராம்,
பூந்தி - 1 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

மாவு கலவை செய்ய...

கடலை மாவு - 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

பூண்டு சட்னி செய்ய...

பூண்டு - 10 பல்,
எண்ணெய், மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
பூண்டை  எண்ணெயில்  வறுத்து எடுத்து மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


எப்படிச் செய்வது?

பனீரை சிறு சிறு சதுரமாக நறுக்கி, அதன் நடுவில் சிறிது கீறி பூண்டு சட்னியை அடைத்து தனியாக வைக்கவும். தட்டில் பூந்தியை பொடியாக்கி கொள்ளவும். பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து 15 நிமிடங்கள் வைக்கவும். பனீர் துண்டுகளை மாவு கலவையில் முக்கியெடுத்து, பூந்தியில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்