SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடித்து அரைத்த இறைச்சி கறி

2018-07-05@ 15:56:55

என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 5,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 30 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
மிளகு - 10 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு - 6, ஏலக்காய் 5,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
வெண்ணெய் - 50 கிராம்,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் தனியா, காய்ந்தமிளகாய், சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுத்து ஆறியதும் உரலில் இட்டு பொடித்து கொள்ளவும். துருவிய தேங்காயை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் அரைத்து கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை வதக்கி மட்டன், உப்பு சேர்த்து கிளறவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக கொதி வந்ததும் தேங்காய் விழுது, இடித்த தூள் வகைகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மட்டன் நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்