SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் ஸ்டஃப்டு கட்லெட்

2018-07-05@ 15:52:32

என்னென்ன தேவை?

வாழைக்காய் - 1,
வேகவைத்த கொண்டைக்கடலை, துருவிய பனீர் - தலா 1/2 கப்,
மாங்காய் தூள், சாட் மசாலாத்தூள் - தலா 1 சிட்டிகை,
மல்லித்தழை - 1  கைப்பிடி,
சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கு,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
பிரெட் தூள் - 1 கப்.


எப்படிச் செய்வது?

வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயம், சீரகம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, மசித்த கொண்டைக்கடலை, மல்லித்தழை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் போட்டு கலந்து வாழைக்காய், மாங்காய்த்தூள் போட்டு கிளறி இறக்கவும்.

ஸ்டஃப்பிங்க்கு...

பனீர், சிறிது வெங்காயம், மாதுளை முத்துக்கள், சாட் மசாலாத்தூள், மல்லித்தழை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாழைக்காய் கலவையை பெரிய உருண்டையாக செய்து உள்ளே பனீர் பூரணத்தை வைத்து மூடி வடையாக தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக புதினா சட்னியுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்