SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னா மசாலா

2018-07-05@ 15:48:06

என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

வறுத்து கொர கொரப்பாக அரைக்க...

சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2.

மேலே தூவி அலங்கரிக்க...

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லித்தழை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
வெள்ளரி - 3 டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
விரும்பினால் எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் கொண்டைக்கடலையுடன் சோள மாவு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த பொடியை தூவவும். பரிமாறும் முன்பு கிண்ணத்தில் பொரித்த சென்னாவை போட்டு அலங்கரிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்