SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜிடபிள் மோமோஸ்

2018-07-04@ 12:48:58

என்னென்ன தேவை?

மோமோஸ் செய்ய...

மைதா - 1 கப்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு.

ஸ்டஃப்பிங் செய்ய...

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், வெங்காயத்தாள் - யாவும் சேர்த்து 1 கப்,
பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 2,
லைட் சோயாசாஸ் - 1½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, எண்ணெய், உப்பு கலந்து நன்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு வதக்கி, அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சிறிது தண்ணீர் ஊற்றி அரைவேக்காடாக வேகவைத்து, வெங்காயத்தாள் தூவி இறக்கி ஆறவைக்கவும்.மைதா மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, குட்டி சப்பாத்தியாக தேய்த்து, நடுவில் காய்கறி கலவையை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுத்து மோமோஸ் சாஸுடன் பரிமாறவும்.

மோமோஸ் சாஸ் செய்ய...

பெங்களூர் தக்காளி - 2, காய்ந்தமிளகாய் - 4 இரண்டையும் வேகவைத்து வடிகட்டி, தக்காளியின் மேல் தோலை உரித்து, அதனுடன் பூண்டு, 1 கைப்பிடி வெங்கா யத்தாள், உப்பு, சோயா சாஸ் 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும். சாஸ் ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்