SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மில்க் மிக்ஸ் பேன் கேக்

2018-06-27@ 12:08:01

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 400 கிராம்,
மைதா - 50 கிராம்,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
நெய் - 300 மி.லி.


எப்படிச் செய்வது?

வெதுவெதுப்பானத் தண்ணீரில் குங்குமப்பூவை கரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 300 கிராம் சர்க்கரை, 100 மி.லி. தண்ணீரை சேர்த்து ஒரு கம்பி பாகுபதத்திற்கு காய்ச்சி அதில் குங்குமப்பூ கரைசலை சேர்த்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் பாலை சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். இதனுடன் மைதா, மீதியுள்ள சர்க்கரை சேர்த்து எடுத்து ஊற்றும் பதத்திற்கு மாவைக் கரைக்கவும்.

மாவு கெட்டியாக இருந்தால் சிறிது பாலைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்பு 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்து, சூடான நான்ஸ்டிக் தவாவில் நெய் விட்டு 1 ஸ்பூன் மாவை ஊற்றி பேன் கேக் போல் பரப்பி விடவும். இருபுறமும் நெய் சேர்த்து பொன்னிறமாக வெந்ததும் எடுத்து நெய்யை வடித்து சர்க்கரைப்பாகில் முக்கி 20 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு: பாலுக்குப் பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாம். மைதாவிற்குப் பதில் கோதுமை மாவைச் சேர்த்தும் பேன் கேக் செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்