SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுஷா

2018-06-13@ 12:21:16

என்னென்ன தேவை?

பாதுஷா செய்ய...
மைதா - 1½ கப்,
நெய், தயிர் - தலா 6 டேபிள்ஸ்பூன்,
ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்.
முந்திரி, பாதாம் தூள் - தலா 1 டீஸ்பூன்,
பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு.

பாகு செய்ய...
சர்க்கரை - 1½ கப்,
தண்ணீர் - 3/4 கப்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

மைதா, சோடா உப்பை தனித்தனியாக சலிக்கவும். அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சமையல் சோடாவை நுரைக்க தேய்த்து, தயிர் சேர்த்து மீண்டும் தேய்க்கவும். இப்போது சிறிது சிறிதாக மாவை கொட்டி, பாதாம், முந்திரி தூள் சேர்த்து மெதுவாக, மிருதுவாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து, ஒரு ஈரத் துணி கொண்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு மாவிலிருந்து எலுமிச்சையளவு உருண்டை எடுத்து தட்டையாக செய்து நடுவில் கட்டை விரல் கொண்டு அழுத்தி, சூடான நெய் அல்லது எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பாதுஷாவை போட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு பொரித்தெடுக்கவும். பாகிற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ சேர்த்து ஒரு நூல் கம்பி பாகு பதத்திற்கு வந்ததும், பொரித்த பாதுஷாவை சூடான பாகில் முக்கி எடுத்து அடுக்கி வைக்கவும். பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பாதுஷா இனிப்பு அதிகம் வேண்டுமென்றால் பாகில் சிறிது நேரம் வைத்து எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்