SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு

2018-06-12@ 17:32:19

என்னென்ன தேவை?

கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்,
கத்தரிக்காய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்),
முருங்கைக்காய் - 1 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்),
சின்ன வெங்காயம் - 10,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப், பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு - 1,
ஏலக்காய் - 1,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, சின்ன வெங்காயத்தை முழுதாக போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அரைத்த விழுது, உப்பு, புளிக்கரைசல், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக வெந்த கடலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்