SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை இறைச்சி தீயல்

2018-06-07@ 14:15:07

என்னென்ன தேவை?

மட்டன் - 1/4 கிலோ,
காய்ந்தமிளகாய் - 50 கிராம்,
தனியா - 50 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
மிளகு - 10 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா 4,
கடுகு - 20 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - 1 துண்டு,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
வெண்ணெய் - 50 கிராம், உப்பு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மட்டனை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, சோம்பு, கடுகு, வெந்தயம் இவைகளை தனித்தனியாக வறுத்து நைசாக அரைத்து கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் மொத்தமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலையை வறுத்து ஆறியதும் மிக்சியில் அரைத்து கொள்ளவும். கடாயில் மட்டன், அனைத்து மசாலா தூள் வகைகள், அரைத்த கலவை, உப்பு, தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்