SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக் கோழி குழம்பு

2018-06-06@ 15:02:40

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி - 1 கிலோ.
சின்ன வெங்காயம் - 200 கிராம்.
தக்காளி - 100 கிராம்.
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி.
தேங்காய்ப் பால் - 1 கப்.
மஞ்சள் தூள் - கால் சிட்டிகை.
மிளகாய்த் தூள் - 2 மேஜைக்கரண்டி.
மல்லித் தூள் - 2  தேக்கரண்டி.
சோம்பு - 2 சிட்டிகை.
பச்சை மிளகாய் - 4.
கறிவேப்பிலை - கைப்பிடி அளவு.
கொத்தமல்லி - கைப்பிடி அளவு.
எண்ணெய் - சிறிதளவு.
உப்பு - தேவைக்கு.

மசாலா கணக்கு:

தக்காளி, சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி அடி கனமான சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வாசம் வரும்போது காய்ந்த மிளகாய், மல்லி சேர்த்து நன்றாக வதக்கி அரைக்க வேண்டியதை அம்மியில் மட்டும் அரைக்கவும்.


எப்படிச் செய்வது?

நாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். கூடவே கோழிக்கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பின்னர் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். இறுதியாக இறக்கிய பின் கொத்தமல்லி சேர்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்