SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை

2018-06-05@ 16:04:53

என்னென்ன தேவை?

எலுமிச்சைப்பழம்- 1,
பிரவுன் சுகர் - 1½ டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,
ஃபிஷ் சாஸ் - 1 டீஸ்பூன்,
இறால் - 3/4 கிலோ,
கடலை எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சிவப்பு குடைமிளகாய் - 2,
பச்சைமிளகாய் - 1,
வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எலுமிச்சைச்சாறு, சோயா சாஸ், சர்க்கரை, ஃபிஷ் சாஸ் சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெயில் இறாலை பிரட்டிகொத்த மல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறாலை சேர்த்து நன்கு வதக்கவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச்சாறு கலவையை சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும். வெந்ததும்  கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • modihariyana

    அரியானாவில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் மோடி

  • kajadeltarelief

    கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் கடும் பாதிப்பு : நிவாரணம் கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்