SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரத்காரி

2018-06-05@ 16:03:50

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்,
வெண்ணெய்,
எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

பூரணத்திற்கு...

துருவிய தேங்காய் - 2 கப்,
சர்க்கரை - 1½ கப்,
பொட்டுக்கடலை - 3/4 கப்,
உடைத்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை  இல்லாத பால்கோவா - 3/4 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மைதா மாவில் வெண்ணெய், எண்ணெய், தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து, பூரிகளாக இட்டு வைக்கவும். வெறும் கடாயில் பொட்டுக்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய்த்துருவலை வறுத்து வைக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி, பால்கோவா, 1/2 கப் சர்க்கரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பூரணம் ரெடி. திரட்டிய பூரியில் 3 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, மூடிய பகுதிகளை லேசாக முள் கரண்டியால் குத்தி விடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சூரத்காரியை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் மீதியுள்ள 1 கப் சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு கம்பிப் பதம் பாகு காய்ச்சி, பொரித்த சூரத்காரிகளை அதில் போட்டு நனைத்து உடனே எடுத்து பரிமாறவும். ஊற
வைக்க கூடாது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்