SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொச்சைக் கொட்டை குழம்பு

2018-05-28@ 12:52:37

என்னென்ன தேவை?

மொச்சைக்கொட்டை - 250 கிராம்.
சின்ன வெங்காயம் - 100 கிராம்.
தக்காளி - 100 கிராம்.
மஞ்சள் தூள் - சிறிதளவு.
மிளகாய், மல்லி சேர்த்து அரைத்த வீட்டு மசாலா தூள் - அரை தேக்கரண்டி.
கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க.
தேங்காய் - 3 கரண்டி (துருவியது).
சோம்பு - அரைத் தேக்கரண்டி.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

மொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு  வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்க்கவும். இவை காய்ந்து வெடித்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து  பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளியைக் கலந்து மஞ்சள் தூள், அரைத்த மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை  வதக்கவும்.

வேகவைத்த மொச்சைக்கொட்டையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை கொதிக்க விடவும் (இதில் மொச்சையை வேகவைத்த  தண்ணீரையும் சேர்க்கலாம்). குழம்பு கெட்டியானவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். மொச்சைக்கொட்டை குழம்பை  சூடான சாதத்துடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்