SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடப்பா

2018-05-09@ 12:54:19

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 500 கிராம்.
உருளைக்கிழங்கு - 200 கிராம்.
பட்டாணி - 50 கிராம்.
வெங்காயம் - 100 கிராம்.
தக்காளி - 50 கிராம் (பொடியாக நறுக்கியது).
கொத்தமல்லி -  சிறிது.
எண்ணெய் - தேவையான அளவு.
எலுமிச்சைப் பழச்சாறு - அரை டீஸ்பூன்.
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் - அரை மூடி.
பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப).
சோம்பு - அரை டீஸ்பூன்.
பட்டை - 1 (பெரியது).
பூண்டு - 4 பல்.
கிராம்பு - 1.
ஏலக்காய் - 1 (விரும்பினால்).
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன்.
பிரியாணி இலை - 1 (சிறியது).
பட்டை - 1 (சிறியது).
கிராம்பு - 2.
பச்சை மிளகாய் - 2 (கீறியது).
கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கடுகு, இலை, கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை  சேர்த்துத் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து உடையாமல் வாசம் போக வதக்கவும். அரைத்த தேங்காய் விழுதுடன் உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு  சேர்த்து கொதிக்க விட்டு கடப்பா கெட்டியாக வரும்போது வேக வைத்த பருப்பை சேர்த்து தளும்ப கொதிக்க விட்டு, பொட்டுக்கடலை சேர்க்கவும். இறுதியாக   எலுமிச்சைப்பழச் சாறு, கொத்தமல்லித்தழைகளை சேர்க்கவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்