SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நட்ஸ் பர்பி

2018-05-08@ 15:08:04

என்னென்ன தேவை?

முந்திரி - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
பாதாம் - 100 கிராம்,
பால் - 50 மி.லி.,
வால்நட் - 5,
இனிப்பு இல்லாத கோவா - 50 கிராம்,
பிஸ்தா - 50 கிராம்,
துருவிய தேங்காய் - 50 கிராம்,
நெய் - 100 மி.லி.,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தாவை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீரை வடித்து பால், தேங்காய்த்துருவல், இனிப்பு இல்லாத கோவாவைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய்யைச் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து கிளறி, அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து நட்ஸ் கலவையை நன்கு கிளறவும். ஏலக்காய்த்தூள் கலந்து, நெய் உருகி நட்ஸ் விழுதின் மேல் மிதக்கும் பதத்துக்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி, நெய் தடவிய தட்டில் கொட்டி சரிசமமாகப் பரப்பி விடவும். சூடு ஆறியதும் அலங்கரித்து விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்