ராஜ்மா சுண்டல்
2018-04-24@ 11:51:10

என்னென்ன தேவை?
ராஜ்மா - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
ஆளி விதை பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கி, கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.