SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் கோப்தா கறி

2018-04-20@ 14:23:09

என்னென்ன தேவை?

கோப்தாவிற்கு...

அரைத்த தேங்காய் விழுது - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கடலைமாவு - 6 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

கிரேவிற்கு...

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
தக்காளி - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
(அலங்கரிக்க) நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலை அரைத்து கிரேவியில் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, பொரித்த கோப் தாக்களை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து
சப்பாத்தி, நாண், தோசையுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்