SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜிடபிள் ரைஸ்

2018-04-17@ 15:24:28

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1,
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 4,
வேகவைத்த பட்டாணி - 1/4 கப்,
வெங்காயம் - 1,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தாளிக்க பட்டை - சிறிய துண்டு,
லவங்கம் - 2, நெய் - 3 டீஸ்பூன்.

அரைக்க...

வெள்ளரி விதை - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
தக்காளி ப்யூரி - 2 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - சிறிய துண்டு.

அலங்கரிக்க...

நெய்யில் வறுத்த முந்திரி - 5,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, வட்டமாக நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் இல்லாமல் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி ஆறியதும் இஞ்சி, வெள்ளரி விதை, தக்காளி ப்யூரி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழையை தூவி தக்காளி, வெள்ளரிக்காய், வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்