SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளு சுண்டல்

2018-04-12@ 11:58:21

என்னென்ன தேவை?

கொள்ளு - 1 கப்,
காய்ந்த பூசணி விதை - 1 டேபிள்ஸ்பூன்,
எள்ளு பொடி - 1 டீஸ்பூன்,
வெல்லப்பாகு - 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பல் பல்லாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கொள்ளுவை 6 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். தேங்காய் பல்லை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, குறைந்த தணலில் வைத்து வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை, வெந்த கொள்ளு, தேங்காய் பல், எள்ளு பொடி சேர்த்து கிளறி இறக்கி, காய்ந்த பூசணி விதையை தூவி பரிமாறவும். இனிப்பு, காரம் சேர்ந்து வித்தியாசமான சுவையில் இருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்