SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலாய் பர்ஃபி

2018-04-11@ 14:23:24

என்னென்ன தேவை?

பால் - 1½ லிட்டர்,
சர்க்கரை - 200 கிராம்,
பாதாம், பிஸ்தா - தலா 3,
முந்திரி - 2,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 50 மி.லி.


எப்படிச் செய்வது?

300 மி.லி. பாலைத் தனியே எடுத்து வைத்து, மீதியுள்ள பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சைச்சாறு ஊற்றி பாலை திரிய வைக்கவும். சுத்தமான மஸ்லின் அல்லது வெள்ளைத் துணியில் திரிந்த பாலைச் சேர்த்து பிழிந்து, மீண்டும் சிறிது தண்ணீரில் 2, 3 முறை புளிப்பு வாடை போக பனீரை வீணாக்காமல் அலசி எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் 300 மி.லி. பாலை கொதிக்க வைத்து பனீர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, பாதாம், முந்திரி, பிஸ்தாவை கேரட் துருவியில் துருவி அலங்கரிக்கவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்