SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் மாங்காய் அவியல்

2018-04-11@ 14:16:53

என்னென்ன தேவை?

விருப்பமான மீன் - 5 துண்டுகள்,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,
புளிக்கரைசல் - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய தக்காளி - 1,
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 50 கிராம்,
கீறிய பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை,
உப்பு - தேவைக்கு,
தேங்காய் - 1/2 மூடி,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
தனியாத்தூள் - 20 கிராம்,
சீரகத்தூள் - 10 கிராம்,
பெருங்காயத்தூள் - 10 கிராம்,
தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.,
கடுகு, வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்,
கிள்ளிய காய்ந்தமிளகாய் - 5.


எப்படிச் செய்வது?

மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி, மாங்காய் போட்டு கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கிளறி மீன், புளிக்கரைசல் ஊற்றவும். பின் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்