SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

2018-04-09@ 15:16:40

என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக்கடலை - 1/4 கிலோ,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
முந்திரி - 10,
வறுத்த கசகசா - 1/2 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உடைத்த உளுந்து - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
காய்ந்தமிளகாய் - 4.


எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும். முந்திரிப்பருப்பையும், கடலைப் பருப்பையும் தனித்தனியே 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். மிக்சியில் ஊறிய கடலைப்பருப்பு, முந்திரி, கொத்தமல்லித்தழை, கசகசா, இஞ்சி, சோம்பு, 3 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, மீதியுள்ள 1 காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வெந்த கொண்டைக் கடலை, உப்பு, அரைத்த மசாலா போட்டு மிதமான தீயில் கிளறவும். பின் வெந்தயப்பொடி, தேங்காய்த்துருவல், கொத்த மல்லித்தழை சேர்த்து புரட்டவும். கொண்டைக் கடலையில் எல்லா மசாலாவும் நன்றாக கலந்து வந்ததும் இறக்கவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்