SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

முள்ளங்கி பொரியல்

2018-03-28@ 14:27:22

என்னென்ன தேவை?

முள்ளங்கி - 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1,
பச்சை மிளகாய் - 1,
காய்ந்த மிளகாய் - 1,
பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்த வேர்கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு-தேவைக்கு, தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பயத்தம்பருப்பை ஊற வைக்கவும். முள்ளங்கியை சிறு துருவலாக துருவிக் கொண்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் வதக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி ஊறிய பயத்தம்பருப்பு, முள்ளங்கித்துருவலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல், உப்பு, வேர்க்கடலை போட்டு பிரட்டி பரிமாறவும்.

குறிப்பு: முள்ளங்கி வடிகட்டிய தண்ணீரில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து சூப்பாக அருந்தலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்