SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை சூர்மா

2018-03-26@ 15:05:38

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 200 கிராம்,
பொடித்த சர்க்கரை - 150 கிராம்,
ரவை - 50 கிராம்,
நறுக்கிய முந்திரி - 12,
ஏலக்காய்த்தூள் - 20 மி.லி.,
பால் - 100 மி.லி.,
நறுக்கிய பாதாம் - 7,
உலர்ந்த திராட்சை - சிறிது.


எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவையை சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும். 50 மி.லி. நெய், பால் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். மீதமுள்ள நெய்யைக் கடாயில் சேர்த்து மிதமானச்
சூட்டில் சூடு செய்து, உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். இதனை மிக்சியில் சேர்த்துப் பிறுபிறுவென அரைத்து, அத்துடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, திராட்சையை கலக்கவும். சூர்மா தயார். பழுத்த வாழைப்பழத்துடன் கோதுமை சூர்மாவை பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்