SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதிர் பேணி

2018-03-12@ 17:11:46

என்னென்ன தேவை?

மைதா - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
நெய் - 1/2 கப் + 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரைத்தூள், எண்ணெய் - தேவைக்கு,
 சோடா உப்பு - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மைதா, சோடா உப்பு, 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அரிசி மாவு, 1/2 கப் நெய் சேர்த்து நன்கு வெள்ளையாக நுரைத்து வரும்வரை குழைத்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தியாக இட்டு, அதன் மேல் குழைத்த அரிசி மாவு கலவையை சிறிது எடுத்து தடவவும்.

இதே போல் 3 சப்பாத்திகள் செய்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு அதனை சுருட்டவும். கத்தியால் 4-5 துண்டுகளாக நிதானமாக நறுக்கி, சிறு பூரிகளாக அழுத்தாமல் இடவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து நிதானமாக பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து ஒரு தட்டில் அடுக்கி சூடாக இருக்கும்போதே அதன் மேல் சர்க்கரைத்தூளை தூவி அடுக்கி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்