மணத்தக்காளி கீரை சாதம்
2018-02-21@ 14:24:50

என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரை - 1/2 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
காய்ந்தமிளகாய் - 4,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்.
தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் இல்லாமல் உளுத்தம்பருப்பு,
மிளகு, காய்ந்தமிளகாயை தனித்தனியாக வறுத்து, மணத்தக்காளி கீரை வதக்கி
ஆறவைத்து, புளி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக
அரைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து,
அரைத்த விழுது சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரியும் வரை கிளறி, சாதம்
சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல் தூவி
அலங்கரித்து பரிமாறவும்.