SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கத்தரிக்காய் தக்காளி கடைசல்

2018-01-22@ 12:50:33

என்னென்ன தேவை?

பழுத்த நாட்டுத் தக்காளி - 5,
பெரிய வெங்காயம் - 1,
முற்றாத கத்தரிக்காய் - 200 கிராம்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கத்தரிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி  கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, சீரகத்தூள், தனியாத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி, கத்தரிக்காய், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய காய்ந்தமிளகாய், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சேர்த்து இறக்கவும். பிளெண்டர் அல்லது மத்தால் நன்கு மசிய கடைந்து இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

குறிப்பு: பீர்க்கங்காய், செளசெள, சுரைக்காயிலும் தக்காளி கடைசல் செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்