SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாலாடு

2018-01-04@ 14:37:55

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 1 கப்,
பாசிப்பருப்பு - 1/4 கப்,
சர்க்கரை - 1¼ கப்,
நெய் - 1/2 கப்,
முந்திரி - 10,
ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை வெறும் கடாயில் போட்டு சிறு தீயில் வறுத்தெடுக்கவும். அதேபோல் பாசிப்பருப்பையும் வறுத்தெடுத்து, இரண்டையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மாவுக் கலவையுடன் கலந்து கொள்ளவும். முந்திரியைப் பொடியாக நறுக்கி லேசாக நெய்யில் வறுத்து மாவுடன் கலக்கவும்.

அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்  பொடியையும் கலக்கவும், நெய்யை சூடாக்கி அதில் சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து அலங்கரித்து பரிமாறவும்.குறிப்பு: பருப்பு வகைகளை கவனமாக சிறு தீயில் ஒன்றிரண்டு பருப்பு கூட தீயாமல் வறுக்கவும்.

Tags:

Maladu
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்