SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான் பெப்பர் மசாலா

2018-01-02@ 12:10:24

என்னென்ன தேவை?

இறால் - 250 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய தக்காளி - 1,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உடைத்த மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய தேங்காய் - 1/2 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
கோகம் புளி - 2 சின்ன துண்டுகள்,
தேங்காய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - 1 கொத்து.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கி, மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி, தேங்காய் துண்டுகளை போட்டு வேகவிடவும். தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்