SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளி வெல்ல மிக்ஸ் குழம்பு

2017-12-06@ 10:47:12

என்னென்ன தேவை?

நாட்டுத்தக்காளி - 500 கிராம்,
எண்ணெய் - 1½ டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கு,
காய்ந்தமிளகாய் - 3-4,
பொடித்த வெல்லம் - 1/2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பருப்புப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பருப்புப் பொடி...

கடாயில் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும். காய்ந்தமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பருப்புப் பொடி, தனியாத்தூள், சீரகத்தூள் கலந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து, காய்ந்தமிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கி, பொடித்த பொடி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கரம்மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெல்லத்துருவல், 250 மி.லி. தண்ணீர் ஊற்றி கலந்து, நன்கு வேகவிட்டு மசித்து இறக்கவும். புளிப்பு, காரம், இனிப்பு கலந்த குழம்பை இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்