SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கைக்கீரை சாதம்

2017-12-06@ 10:40:54

என்னென்ன தேவை?

உதிராக  வடித்த  சாதம் - 2 கப்,
கழுவி சுத்தம் செய்த முருங்கை இலை - 1 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

வறுத்துப் பொடிக்க...

கடலைப்பருப்பு, தனியா, எள், வேர்க்கடலை - தலா 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி,
வெங்காயத்தை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கிய கலவை - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

வறுக்க கொடுத்த பொருட்களை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பருப்புகள் பொன்னிறமாக வறுபட்டதும் முருங்கை இலையை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, பொடித்த பொடி சேர்த்து வதக்கி, சாதம் கலந்து அடுப்பை நிறுத்தவும். வதக்கிய தக்காளி, வெங்காயம் கலவையை முதலில் தூவி, அதன் மேல் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்