SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீல்மேக்கர் பிரியாணி

2017-11-14@ 16:02:27

என்னென்ன தேவை?
 
பாஸ்மதி அரிசி - 1 டம்ளர்,
மீல்மேக்கர் - 1 டம்ளர்,
உப்பு-தேவைக்கு,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - சிறிது,
புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.


எப்படிச் செய்வது?
 

பாஸ்மதி அரிசியை ஊறவைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது ஊறவைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். (ஊறிய மீல்மேக்கர் அதிக சூடாக இருக்கும்) கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து பட்டை தூள் போட்டு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி மிக்சியில் நைசாக அரைக்கவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, கிராம்புத்தூள், சோம்பு தூள் தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து பிரட்டி குக்கருக்கு மாற்றி 2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்