SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஷ்ரூம் டகாடக் பரோட்டா

2017-11-10@ 14:01:40

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 1 கப்,
மைதா - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு.

அரைக்க...

காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 4 பல்.

ஸ்டஃப்பிங்க்கு...

மஷ்ரூம் - 250 கிராம்,
குடைமிளகாய் - 1/2 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1 (அரைக்கவும்),
தக்காளி சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 4 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். அரைக்க கொடுத்த காய்ந்தமிளகாய், பூண்டு 1/4 கப் கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைத்து இறக்கவும். ஆறியதும் இரண்டையும் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். வெங்காயம், குடைமிளகாய், காளானை சிறு துண்டுகளாக நறுக்கி, கடாயில் எண்ணெயை காயவைத்து காளானை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டை வதக்கி, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சாறு, தனியாத்தூள், கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்த விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, குடைமிளகாய், வதக்கிய காளானை சேர்த்து வதக்கவும். தக்காளி சாஸ் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்டியானதும் இறக்கவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி, மஷ்ரூம் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்