SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபைபர் பான் கேக்

2017-10-23@ 12:22:40

என்னென்ன தேவை?

கேழ்வரகு, கம்பு, சோளம் - தலா 1/2 கப்,
சிவப்பு அரிசி, பொடித்த வெல்லம் - தலா 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - தேவைக்கு,
தேன் - 4 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பல் பல்லாக உடைத்தது - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரிசி, தானிய வகைகளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவில் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேங்காய் துண்டுகள், உப்பு கலந்து சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து, தேனை பரவலாக ஊற்றி பரிமாறவும். குறிப்பு: இனிப்பு வேண்டாமென்றால் மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, பச்சைமிளகாய், மிளகு, கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை, தேங்காய்ப்பல் சேர்த்து காரமாக செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்