SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ட்ராபெர்ரி மெல்பா ஐஸ்கிரீம்

2017-10-23@ 12:15:08

என்னென்ன தேவை?

ஐஸ்கிரீம் - 2 கப்,
நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழம் - 6 அல்லது தேவைக்கு,
ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பாக்கெட் - 1,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க நறுக்கிய நட்ஸ்,
டிரை ஃப்ரூட்ஸ் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஜெல்லி பாக்கெட் அளவின்படி, 1 கப் தண்ணீரில் ஜெல்லியை கலந்து கொதிக்க வைத்து, தேன் போல் வந்ததும் இறக்கி ஆற விடவும். ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு, அதன் மேல் 1 கப் ஐஸ்கிரீமை வைத்து, அதன் மேல் நட்ஸ், ட்ரை ஃப்ரூட்சை தூவவும். ஃப்ரிட்ஜில் செட் ஆன ஜெல்லியை எடுத்து துண்டுகள் செய்து போடவும். அதன் மீது மீண்டும் மற்றொரு லேயரை போட்டு டம்ளர் 3/4 பாகம் வந்ததும் ஐஸ்கிரீமை வைத்து அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி பழம், நட்ஸ் கொண்டு அலங்கரித்து குளிரவைத்து உடனே பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்