SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளி கார சால்னா

2017-10-11@ 12:02:49

என்னென்ன தேவை?

தக்காளி - 3, பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
கிராம்பு - 2,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
இஞ்சி - 1/4 இன்ச்,
பூண்டு - 5 பல்,
பட்டை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கசகசா - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, ஏலக்காய் சேர்த்து வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம்,  தேங்காய்த்துருவல் போட்டு வதக்கி இறக்கவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கொத்தமல்லியை தூவி இட்லி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Britain_Rain

    பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்