SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளி தேங்காய் குருமா

2017-09-14@ 14:40:43

என்னென்ன தேவை?

பழுத்த தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 2,
தேங்காய்த்துருவல் - 200 கிராம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 6 பல்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
ஊறவைத்த முந்திரி - 6,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு - சிறிது.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், முந்திரி, இஞ்சி, பூண்டு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பட்டை, சோம்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளியை வதக்கி, அரைத்த கலவை, தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குருமாவை கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை தூவி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு: முந்திரிக்குப் பதில் பொட்டுக்கடலையும், காய்களையும் சேர்த்து குருமா செய்யலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Britain_Rain

    பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்