SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேசர் பந்துவ (கொல்கத்தா ஸ்வீட்)

2017-08-28@ 12:18:13

என்னென்ன தேவை?

பனீர் - 250,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1  சிட்டிகை,
ரவை - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கிலோ,
கேசரி கலர் பவுடர் - சிறிது.


எப்படிச் செய்வது?

ரெடிமேடாக விற்கும் பனீரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைத்து எடுத்து, பின்பு ஒரு சுத்தமான துணியில் கட்டி தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும். தட்டில் பனீர், சேகரி கலர் பவுடர், ரவை சேர்த்து மிருதுவாக வரும்வரை கைவிடாமல் நன்கு தேய்க்கவும். தேய்த்த பனீரை வெடிப்பு இல்லாமல் எலுமிச்சைப்பழ அளவிற்கு உருட்டவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கொதித்து வந்ததும், மிதமான தீயில் வைத்து பனீர் உருண்டைகளை மெதுவாக போடவும்.

5 நிமிடம் கழித்து மீண்டும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்படி 3 முறை செய்யவும். சர்க்கரை தண்ணீர் கெட்டியாகி, உருண்டைகள் மேலே மிதக்கும் பொழுது ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். ஆறியதும் மூடி வைத்து 1 நாள் முழுவதும் ஊறவிட்டு, அடுத்த நாள் பரிமாறவும்.

குறிப்பு: கெட்டியான பாலில் சர்க்கரை, பிஸ்தா, குங்குமப்பூ, ஏலத்தூள், பனீர் உருண்டைகளை சேர்த்து குளிரவைத்தும் பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X